துர்மரணம்

கவிதையை சுமக்க
கட்டுரை எழுத
காவியம் படைக்க
மாணவர்கள் பயன் பெற
நாள் காட்டி அமைக்க
பத்திரிக்கை அச்சடிக்க
என
எவ்வளோ கனவுகளுடன்
மரங்கள் பிரசவித்த
காகித பிள்ளைகள்
துர்மரணம்
அடைகின்றன
டிஷ்யூ பேப்பராய் மாறி
குப்பையில்
வீச படுகையில்

எழுதியவர் : ந.சத்யா (12-Nov-13, 4:40 pm)
சேர்த்தது : சத்யா
Tanglish : thurmaranam
பார்வை : 127

மேலே