மகாத்மா

"போர்பந்தரில் பிறந்த
புத்தன்.
போரில்லா நாட்டை உருவாக்கிய
சித்தன்.
உருவம் தன எளிமை.
உள்ளம் என்றும் வலிமை.
ஆடையை துறந்த
அரைமனிதன்.
அவர்தான் முழுமனிதன்.
வேண்டாம் எந்த இம்சையும்,
வேண்டும் அஹிம்சை என்றவர்.
மது,
மாது,
சூதுவை,
ஒழித்த மகான்.
உண்மையை உரைத்த உத்தமன்.
சத்தியம், தியாகம் என்ற
இருகண்ணில்
உருவானது
சத்தியாகிரகம்
தேடித் பார்த்தேன்
கிடைக்கவில்லை.
முயற்சி செய்தேன்,
முடியவில்லை.
அவரை போல் வாழ ,
ஆயிரம் ஆத்மாக்கள்
தோன்றினாலும்
ஆகமுடியாத மகாத்மா அவர்.

எழுதியவர் : (14-Nov-13, 11:57 am)
சேர்த்தது : vaitheeswaran
Tanglish : mahathmaa
பார்வை : 70

மேலே