தென்றலே தென்றலே
செல்லத் தென்றலே
செல்லத் தென்றலே
சிலுசிலுவென வீசு தென்றலே !
நீ என்னைத் தழுவும் போதும்
உன் ஸ்பரிசத்தில் நான் லயிக்கும் போதும்,
போதும் போதும் போதும்
என்ற வார்த்தை மறந்தே போகும் !
பூவாடைக் காற்றாக வந்தாய்
நடுங்கினேன் இல்லை இல்லை
எனக்குள் நிகழ்ந்த துள்ளல் அது !
புதிதாய் உணர்ந்தேன் உன்னை
பாசத் தழுவல்களும்
செல்லத் தீண்டல்களும்,
என் உடலில் மட்டும் அல்ல
என் உணர்வுகளிலும் கலந்துவிட்டாய் நீ......!