தளர்த்தி மனம் மாறி

வேலைப் பளுவிலே மறந்தான் தன்னை
உண் மறந்தான் உடை மறந்தான்
குடி மறந்தான்

வேலை வேலை என்று திரிந்த அவனிடம்
அன்பு இருந்தது கனிவு இருந்தது
களிப்பு இல்லை.

வேலையைத் தவிர அவனுக்கு ஏதும் இல்லை
பாசம் தெரியும் நேசம் தெரியும்
எல்லாம் தெரியும்

வேலையை நேசித்து வாழ்ந்தான்
மனைவியோடு அன்போடு வாழ்ந்தான்
ஏனோ மனைவிக்கு புரியவில்லை

அவளுக்கு எதும் வெளிப்படையாக வேண்டும்
அன்பும் ஆதரவும் ஆலிங்கனமும்
வெளியில் போவதும் வருவதும்

அவனுக்கோ எதும் அளவாக இருத்தல் வேண்டும்
பாசமும் அரவணைப்பும் நான்கு சுவற்றுக்குள்
எல்லாமே வீட்டிற்குள்
.

பிணக்கும் சண்டையும் அவ்வப்பொழுது தோன்றின
அவன் கோபப்பட அவள் அழுக
சுற்று சலனங்கள் ஏற்பட்டன.

இருவரும் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும்
அவனும் தன கெடுபிடியைத் தளர்த்தி
அவளும் தன எண்ணத்தை மாற்றி.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (15-Nov-13, 9:28 am)
பார்வை : 1107

மேலே