நெஞ்சமெல்லாம் நீயடி

கண்ணீரிலே கவிதை,
வடிக்கிறேன்,
அதில் எழுத்து மைய்யாய்,
என் ரத்தம் கலக்கிறேன்,

பிரிவு சுகம் தான்,

நீ இல்லாமல்,
நான் வாழும் வாழ்க்கைக்கு,
உயிர் என்னை விட்டு,
பிரிவது,

பிரிவு சுகம் தான்,

பாலைவனமாய் இருந்த,
என் வாழ்க்கை,
பூக்கும் தோட்டமாய்,
நீ மாற்றி,
வாட செய்கிறாய்,

நீ இன்று,
நான் பார்க்கா,
தொலைவில்,
நீ நின்று,

என் கண்ணீர்,
துடைக்கும்,
உன் முத்தம்,
உன் மடியில்,
உறக்கம்,
உன் காதோடு,
நான் சொல்லும்,
ரகசியங்கள்,
ஆசையாய் நீ,
அழைக்கும் என் பெயர்,
உன் முகம் பார்த்தே,
நான் புரிந்து கொள்ளும்,
உன் மௌன பாஷை,
காய்ச்சலுக்கு மருந்தாய்,
உன் கட்டிபிடிப்பு,
நீ பாடி நான் உறங்கும்,
என் இரண்டாம் தாலாட்டு,
சாதிக்க தூண்டும்,
உன் பார்வை,
எதுவும் இல்லை,
என் அருகில்,

தொலைவில் இருக்கும்,
இருவரும்,
நினைத்தவுடன்,
ஒன்றாய்,
பார்த்து கொள்வது,
நிலாவையும்,
நம் நினைவுகளையும் தான்,

காதலியாய் நீ,
கண்ணாமூச்சி ஆடியது,
போதும்,
மனைவியாய் ஆவது,
எப்போது?

நீ இல்லாமல்,
வாழ்கிறேன் நான்,
உப்பில்லாமல்,
உண்டாக்கும் உணவாக,

எனக்காக நீ,
எத்தனை வருடம்,
காத்திருப்பாய் என,
எல்லோரும்,
கேட்கும் கேள்வி,
ஆனால் அதை,
நீ கேட்காமலே,
நான் காத்து இருகிறேன்,
பத்தாண்டாய்,
நீ சொல்லும் பதிலில் தான்,
இருக்கிறது,
என் புத்தாண்டு,

எழுதியவர் : kaarthick (16-Nov-13, 3:49 pm)
பார்வை : 135

மேலே