தெய்வத்தின் தாய்
என் குழந்தை பிறந்தபோது
என் தாய்மையும் பிறந்தது!
நான் குழந்தையாக
சிறுமியாக இளைஞியாக
இருந்தபோதெல்லாம்
எனக்குள் ஒளிந்திருந்ததா
என் தாய்மை?
பருவத்தின் உருவத்தை
சிலர் கண்களால் உரசித்தபோது
"ஏன் கடவுளே என்னைப்
பெண்ணாகப் படைத்தாய்" என்று
நினத்தபோதெல்லாம் புரியாதது
என் குழந்தையின்
முதல்பசி ஆற்றியபோது புரிந்தது!
உன் பிஞ்சு நடையின்
முதல் சாட்சி நான்!
உன் தந்தையை உனக்கு
அறியமுகப்படுத்தியள் நான்!
தெய்வத்திற்கும் தாயுண்டு
ஆம்!
குழந்தைகள் தெய்வத்திற்குச் சமம்
அப்படியானால் பிறக்கும்
ஒவ்வொரு குழந்தையின் தாயும்
தெய்வத்தின் தாய்தானே...?