உலகம் உன் கையில்

அமெரிக்காவை சுற்றி பார்க்க பல நாட்டில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து இருந்தார்கள்.அவர்கள் எல்லோரும் நியூயார்க்கை சுற்றி பார்க்க வந்த போது,
அங்கே இருந்த ஒரு கடைக்காரர் எல்லோரிடமும் எத்தனை நாள் தங்க போகிறீர்கள் என்று கேட்டார்.
இங்கிலாந்து பயணி நான் ஆறு மாதம் தங்க போகிறேன் என்றார்.உடனே கடைக்காரர் அப்போ நீங்க அமெரிக்கா பற்றி கொஞ்சம் தான் தெரிந்து கொள்வீர்கள் என்றார்.ஜெர்மனி பயணி நான் மூன்று மாதம் தங்க போகிறேன் என்றார்.அப்போ நீங்க பாதி அமெரிக்காவை சுற்றி பார்க்கலாம் என்றார்.
இந்தியா பயணி நான் ஒரு மாதம் தான் தங்க போகிறேன் என்றார்.உடனே கடைக்காரர் நீங்கள் தான் முழு அமெரிக்காவையும் சுற்றி பார்க்க போகிறீர்கள் என்றார்.அப்போ இங்கிலாந்து பயணி கேட்டார் ஆறு மாதம் நான் பார்க்க முடியாததை ஒரு மாதத்தில் எப்படி பார்ப்பது என்று,அதற்கு கடைகாரர் நீங்கள் ஆறு மாதம் இருக்கிறோம் என்ற நினைப்பில் நாளை பார்க்கலாம்,நாளை பார்க்கலாம் என்று போகும் வரை எதையும் முழுசாய் பார்க்க மாட்டீர்கள் .ஆனால் ஒரு மாதமே உண்டு என்று இவர் தான் எல்லா நாளையும் பயனுடையதாய் ஆக்கி எல்லாவற்றையும் பார்ப்பார் என்றார் .
நம் வாழ்க்கையும் அப்படிதான் நிறைய நாள் வாழ்கிறோம் என்று உழைக்காமல் உறங்கியும்,மது குடித்து உடலை வருத்தியும்,கொலை,கொள்ளை என்ற பாவ செயல் செய்தும் வயதான பின்னே தவறுகளை நினைத்து வருந்தி மடிகிறோம்.அப்படி இல்லாமல் நாளை என்பதை நம்பாமல் இன்று மட்டும் என எண்ணி வாழ்ந்தால் உலகம் உங்கள் கையில் தான்.

எழுதியவர் : கார்த்திக் (17-Nov-13, 3:58 pm)
Tanglish : ulakam un kaiyil
பார்வை : 230

மேலே