பண்டிகைகள் வாழ்க்கை வழிகாட்டிகள்

நம்பிக்கைகளின் கொண்டாட்டம்
பண்டிகைகள் தானே
நட்போடும் உறவோடும்
உழைப்பைப் போற்றவும்
உறவுகளை வளர்க்கவும்
மரபுகளைப் போற்றவும்
சந்தோஷ தருணங்களில்...!

நம் மனதையும் வயிறையும்
நனைத்துப் போகும் நதிக்கு
கொண்டாடுகின்றோமே
ஆடியில் பெருக்கெடுக்கும்
காவிரிக்கு மலர்ச்சூடி .....!

ஆயுத பூஜையிலே உழைப்பாளியின்
உயிரற்ற ஜீவன்கள் நிலைத்து வாழ
நம் சொல் கேட்கும் கருவிகளுக்கெல்லாம்
சந்தனமும் மா தோரணங்களும்...!

ஏழை எளியவர்கள் மணக்க
உறவினரோடும் நண்பர்களோடும்
இரக்கம் காட்ட வந்த திருநாள்
ரம்ஜான் திருநாள் ..!

சமாதானத்தையும் அமைதியையும்
மனிதர்களிடையே அன்பையும்
மண்ணில் நிரந்தரமாய் வாழவும்
கிறிஸ்து திருநாள்..!(கிறிஸ்துமஸ்)

தீப ஒளித் திருநாளாம்
மனம் மகிழ்வு தரும்
பண்பாட்டைப் பறைசாற்றும்
நன்னாளாம் ..!(தீபாவளி)

கதிரவனுக்கும் கழனிகளுக்கும்
காளைகளுக்கும் நன்றி சொல்ல வரும்
பண்டிகையாம் பொங்கல் திருநாள்..!

இவ்வகை பண்டிகைகளினால்
அடுத்தவர்களை மகிழ்வூட்ட
நாம் நம்மைப் பற்றி
சிந்திப்பதை நிறுத்தி...

நம்மைப் பற்றி
சிந்திக்கும் போது
கவலை பயம் எனும்
மன நோய் தொற்றுகின்றன.
கண்ணாமூச்சி காட்டியே...!

வான வேடிக்கைகளின்
வர்ணங்களும் மாயாஜாலங்களும்
நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் போது
நாற்பது வயதில் இருபது வயது பிள்ளைபோல
மனம் முழுதும் குதூகளிக்கின்றது
காற்றில் ஆடும் ஊஞ்சலைப் போல...!

வாழ்க்கையில்வியப்பான விளைவுகள் வரும்போது
ஈரத்தை உறிஞ்சும் பஞ்சு போல அமுங்காமல்
கண்ணாடி மீது வழிந்து விழும் நீர் துளிகளைப் போல
அனைத்தையும் துடைத்துவிட்டுப் பாருங்கள்
உங்கள் அக முகம் மகிழ்ச்சி அடைவதைச் சொல்லும்
பளிச் என்று மினுக்கும் பிரகாசத்தோடு...!

எழுதியவர் : தயா (17-Nov-13, 11:21 pm)
பார்வை : 201

மேலே