தெளிந்த ஞானம்
தொலைந்தது போகட்டும்
போனது தொலையட்டும்
தெரிந்தது மறையட்டும்
மறைந்தது தெரியட்டும்
சுட்டது எரியட்டும்
எரிந்தது சுட்டுவிடட்டும்
மயக்கம் தெளியட்டும்
தெளிந்தது மயக்கட்டும்
மரணம் ஓய்வு எடுக்கட்டும்
ஓய்வு இனி மரணிக்கட்டும்
புயல் அமைதியாகட்டும்
இவன் அமைதி புயல் ஆகட்டும்