என்னவளே
இருண்ட வானில் ஒளியாக வந்தாய்
ஊசியின் காதில் ஒட்டகமாய் நுழைந்தாய்
காதல் இருந்த நெஞ்சில் கலவரங்கள் செய்தாய்
என்னையும் இப்படி கவிதை எழுத வைத்தாய்
அன்று பெய்த மழையில்
குடை விரிக்கும் காளானும் அல்லவே - மனதில்
நின்று ஒலிக்கும் பாரதியின்
பைந்தமிழ்க் கவியும் நீதானே
என்னடி அதிசயம் இது
வரும் போது வசந்தமாய் தானே வருகிறாய்
போகும் போது நான் நிற்கும்
இடம் மட்டும் பாலையாய் சுடுகிறதே
என் இதயம்
கழகக்காரர்களின் பொதுக்கூட்டம் - நீ இருந்தால்
மௌனிகளின் கல்லறைத்தோட்டம் - நீ பிரிந்தால்