இது என்ன பாட்டு
இருட்டுக் கடை
அல்வா
கருப்பு கலர்
தாத்தா
எடுப்புச் சோறு
ஆயா
அடுப்பில வைச்ச
பாயா
கொதிக்குது பார்
மீனா
கோபத்தில வருது
கானா
கொக்...கொக்..கொக்...
கொக்கரக்கோ
காலியான குப்பைத்
தொட்டி
கலாய்க்கும் நான்சியோட
பாட்டி
என்னை பிடிச்ச
நில்லுடி
உனக்கென்ன திமிரா
சொல்லுடி
என்ன சொல்ல
வந்தேனா
தேனா பாயப் போது
நைனா
நைப்பேன்...தைப்பேன்
அடிப்பேன்.. அப்புறம்
எடுப்பேன்.....
பேன்....பேன்.... பே.....
நான் பேஷன் ஷோ
ஹீரோடா
என்னை நீ வழிமறிச்ச
காலிடா
போடா....போ....போ.........
என
நடுச்சாமத்தில் உளறிய
மகனுக்கு
கருப்பண்ண சாமி கோயில்
விபூதி பூசினாள்
அம்மா
சாமி காப்பாதுபே என்
புள்ளேயே !
பாவம் அவளுக்கு தெரியாது
அவன் மகன்
சினிமாவுக்கு பாட்டு
எழுதுறேவேன்னு...............