என் நேசமானவளே

அன்புக்குரியவளே!
என் அழகிய
தேவதையே!

பூமி சுற்றும்
நிலா போல
உன்னை சுற்றுகிறது
என் நினைவுகள்

நீ உன் வட்டத்தை
விட்டு வர முடியாது
நான் என் விட்டத்தை
விட்டு வரமுடியாது!

ஆனாலும் என்ன!
செவ்வாய் சுற்றக் கிளம்பிய
மாங்கல்யான் போல
சதா
உன் நினைவுகளை மட்டுமே
சுற்றுகிறது
என் இதயம்!

நம்மை பிரித்தது
சாதியா
இல்லை சதியா
என்று பட்டிமன்றம் நடத்த
அவகாசமும் இல்லை
அதற்க்கான அவசியமும்
இல்லை

இன்று
உனக்கென ஒரு பாதை
எனக்கென ஒரு பாதை
ஆனாலும்
என் தேவதையே

என்றேனும் ஒருநாள்
நாம் முகமெதிர்
சந்திக்கும்
வாய்ப்பு கிடைத்தால்

அன்னியமாகி நீ
போனாளும்
அனலிட்ட மெழுகாய் நான்
அழிந்து போவேன்.

எழுதியவர் : தா. அருள் ரோங்காலி (24-Nov-13, 11:24 pm)
பார்வை : 153

மேலே