எழுத்து

எழுந்து எழுந்து முடியாமல்
எனக்குள்ளேயே உறங்கிப் போகும்
எண்ணமெனும் எழில் குழந்தையை
எழுத்தாக்கி நடை பழக்க
எங்கெங்கோ இடம் தேடினேன்
எத்தனையோ வலை தேடினேன்
எப்படியோ நான் கண்டேன்
எளிமையான ஓர் உலகம்
எழுத்து எனும் தமிழ் உலகம் !

எழுதியவர் : ஜெகதீசன் (25-Nov-13, 12:06 am)
Tanglish : eluthu
பார்வை : 140

மேலே