தமிழ் பிரசவம்

பேனாவிற்கு பிரசவம் பார்த்து
கவிதை குழந்தையை மெல்ல
வெண் காகிதத்தில் படுக்க வைத்தேன்...

தமிழ் குழந்தையின் குரல் கேட்டு
கடந்து சென்றவரேல்லாம் வந்து
அள்ளியெடுத்து உச்சி முகர்ந்தனர்...

முகர்ந்தவர் நாசிகளிலெல்லாம்
தமிழ் வாசனை பரவிற்று....

எழுதியவர் : அருண் (25-Nov-13, 11:34 am)
சேர்த்தது : Arun md
Tanglish : thamizh pirasavam
பார்வை : 77

மேலே