திருப்தி அடையாத மனசு
மின்னி ஜொலிக்கும் தங்க நகைகளின் ஊடே
புன்னகை எனும் நகை இல்லையா என்று கேட்கும்
எல்லை கோடுகள் வரையறுக்கும் தேசங்களை ஆராய்ந்து
நேசம் எனும் தேசம் காணவில்லையா என்று கேட்கும்
வண்ண பூக்களாலான அழகு கோலத்தின் இடையே
சிரிப்பு எனும் பூ கிடைக்கவில்லையா என்று கேட்கும்
சர்வ மதங்களின் தலைவர்கள் கூட்டத்தில் நுழைந்து
சம்மதம் எனும் மதம் சேரவில்லையா என்று கேட்கும்
கடை நிரம்பி வழியும் பரிசுபொருட்களின் மத்தியில்
சிபாரிசு எனும் பரிசு இல்லையா என்று கேட்கும்
அதிகமான ஒலிசேர்க்கை ஆர்பரிக்கும் கூட்டத்தில்
கரவொலி எனும் ஒலி எழுப்புங்கள் என்று கேட்கும்...