மாக் கோலம்

அன்று

வாசலில் கோலம் போடும் நங்கையர்கள்
நளினம் பார்த்து மங்கையவள்
மணப்பெண் ஆன காலம் உண்டு
கோலத்தின் நேர்த்தி கண்டு குணம்
அறிந்த காலம் அது

விடிந்தும் விடியாத காலை
வாசல் பெருக்கி நீர் தெளித்து
போடும் புள்ளி கோலம்
விளக்கிச் சொல்லும் பெண்ணின்
நலம் கூறும் பண்புதனை

கை வாகு கை நேர்த்தி
வாசல் நிறைக்கும் மாக் கோலம்
மங்கையவள் மனசைச் சொல்லும்.

வீதி முகப்பில் விரும்பியவர்
நின்று பார்க்க
விருப்பமுடன் சேதி வர காத்திருக்கும்
காலம் அது.

இன்று

சூரியோதயம் காணாத கன்னியர்கள்
அலுவல் தரும் அகால நேரத் தூக்கம்
கடமை என்று காசே என்று
பயணிக்கும் நேரம் இன்று

நுனி நாக்கு ஆங்கிலம்
ஜோடியாய் அலுவலகம்
சேர்ந்து வாழும் நாகரிகம்
ஏமாந்து கடைசியில் சோகம்

படித்தது பணம் தந்தது
பண்பாடு பரிதவிப்பாய் போனது
மனம் பட்ட பாடு
வாய் விட்டுச் சொல்ல வழி தெரியாமல்
விழியில் கண்ணீரே கூடியது

எழுதுவது எளிது
எடுத்துக் கொள்வார் வேண்டும்
பெற்றோர் ,பெரியோர் நினைவு
மனதில் நிற்கும் தெளிவு
மாற்றம் மலர வேண்டும்

எழுதியவர் : arsm1952 (29-Nov-13, 6:53 pm)
பார்வை : 98

மேலே