தேடுகிறேன் நான்
வறண்ட நெடு நிலத்தில்
வற்றாத நீர் தேடுகிறேன் !
வளர்ந்த நம் வாழிடத்தில்
நிறையவேண்டிய அமைதியை தொலைத்து விட்டு
வறண்ட நெடு நிலத்தில்
வற்றாத நீர் தேடுகிறேன் !
உயிரை குடித்து விட்டு
மோட்சத்தை கேட்பது போல்
இரவை மறந்து விட்டு
கனவுகளை காண்பது போல்
மனிதம் எனும்
வறண்ட நெடு நிலத்தில் !
இரக்கம் எனும்
வற்றாத நீர் தேடுகிறேன் நான் !!
புனிதம் பேசியவர்கள்
புண்ணியம் களைவது போல்
வறுமைக்கு பாய் விரித்து
மரணத்தை பெறுவது போல்
வறண்ட நெடு நிலத்தில்
வற்றாத நீர் தேடுகிறேன் !
சிலர் பொய்யுரைக்க
பலர் மெய்மறைக்க
மனிதம் எனும்
வறண்ட நெடு நிலத்தில் !
இரக்கம் எனும்
வற்றாத நீர் தேடுகிறேன் நான் !!