தாய்தந்தைக்கு அடங்காத தறுதலைகள்

தாய்தந்தைக்கு அடங்காத தறுதலைகள்

தாய்தந்தைக் கடாங்காத தறுதலைகள்
கொத்தடிமை செய்வதற்கே பிறந்தவர்கள்.
வாய்க்கொழுப்பில் காலத்தைக் கழிப்பவர்கள்
வாய்கிழியப் பிறர்பிழையைச் சாடிடுவார்.

தம்பிழை உணரும்நிலை கொள்ளாரவர்
தரங்கெட்ட பேச்சில்தான் உயர்ந்திடுவார்.
வம்பிழுக்கும் வகையிலவர் பேசிடுவார்
வகையறியா வாழ்க்கையே சரியென்பார்.

கடுகடுப்பை நாநுனியில் வைத்திருப்பார்
கடுஞ்சொல்லைத் தேன்மொழியே என்றிடுவார்.
படுகைத்தேள் பாம்புஅவர் கண்களிலே
பனித்துளியாய்ப் பளிச்சென்று மின்னிடுமே.

யாரவரைக் குறைசொல்ல முயன்றாலும்
எமனாகிக் கொந்தளிப்பார் ஒருநொடியில்.
கெட்டவர்தாம் நல்லவர் அவர்கோணத்தில்
கெட்டொழிந்து போவதையே என்றும்உணரார்.

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (29-Nov-13, 7:16 pm)
பார்வை : 143

மேலே