நமக்காக
நாங்கள் சுவாசிக்கும் மூச்சுக்காற்றை ...
சுத்தம் செய்து தருபவளே ..
எங்கள் இயற்கை தாயே ......
இப்படி ஒரு அழகை எங்கள் வருங்காலம் தவற விடுமோ ..
எங்கள் அக்கறை இல்லா குணத்தினால் உம்மை தவற விடுவோமோ ...
சுத்தம் இல்லா உலகத்தை உருவாக்கிவிட்டு ..
கற்பனையில் உன்னை வருங்காலம் கண்டிடுமோ ..
கண்கள் இனிமை காணாமல் வாழ்க்கை சென்றிடுமோ ...
இயற்க்கை தாயே நீ இறைவனின் ஆலயம் அன்றோ
நீ இல்லாத இடத்தில் தெய்வம் தாங்கிடுமோ ..
நீங்கள் இல்லாத உலகத்தில் நாங்கள் வாழ முடியாது ...
இறப்பதும் பிறப்பதும் என்றும் மாறாதது ...
நாங்கள் விடும் புகையில் எங்களையும் சேர்த்து உங்களையும் எரித்துவிடுகிறோம் ...
பச்சை பச்சையாய் குழந்தை போல் இருக்கும் உங்களை கரித்து விடுகிறோம் ..
அக்கறை இல்லாமல் நாங்கள் எரியும் குப்பைகள் உங்கள் முகத்தில் விழ ...
உங்களின் மொத்த உருவமும் ஓர் நாள் குப்பையில் மறைய ...
குப்பைகளுக்கு மேலே தெய்வங்கள் தங்காத கோவிலை கட்ட போகிறோம்...
கொஞ்சம் கொஞ்சமாக மரங்களை வெட்டி வருகிறோம் ..
முடி கொட்டகொட்ட வளரும் என்று கற்பனை செய்கிறோம் ...
முழு வட்டமாக ஓர் நாள் தலையும் மாறிவிடும் ..
பூமி மரங்கள் இல்லா வழுக்கையை போல் ஓர் நாள் மாறிவிடும் ..
சுட்டெரிக்கும் வெயிலில் வட்டம் விரிசல் விடும் ..
வாழும் தகுதியை ஓர் நாள் அது இழக்கும் ..
சிந்தனை செய்பவர்களுக்கு துன்பம் வராது ..
உங்களை அன்புடன் பார்த்து கொண்டால் எந்த துன்பமும் எங்களை தொடாது ..
பூமியெங்கும் பூத்திருந்த மலர்களெல்லாம் ..
இப்போது பூங்காவில் மட்டுமே காணமுடிகிறது ..
காவல் காத்து பாத்திருந்த பறவைகளெல்லாம் ..
இன்று கல்லறையை
தேடி ஓடிக்கொண்டிருக்கின்றது ..
கண்ணுக்கு அழகான மீன்களெல்லாம் ...
மீனவன் கண்ணில் கூட பட்டு ரொம்ப வருடம் ஆச்சு ...
காடுகளில் அலைந்த மிருகங்களெல்லாம் இன்று கூண்டுக்குள் சென்று அடங்கியாச்சு ...
காலில் பட்ட கண்ணாடி போன்ற சில நதிகளெல்லாம் கண்முன்னே குளமாக மாறியாச்சு
கடலில் இருக்கும் வெள்ளம் எல்லாம் எங்கள் வீட்டு வாசலை அலங்கரிச்சாச்சு...
பூமித்தாயின் மண் சதைகளை அறுத்து ஆங்கங்கே .
உடம்பெங்கும் குழிகள் போல் மாற்றியாச்சு
சில பெண்களுக்கு நடக்கும் கொடுமை எனக்கும் நடக்கிறது என்று பூமித்தாய் அலறியாச்சு ...
சூரியனின் வேலையும் அதிகமாச்சு ...
வெயிலுக்கு பார்வை அதிகமாச்சு ...
வெப்பத்தின் கொடுமை மனிதனுக்கு சிறிது புரிஞ்சாச்சு ...
வேப்ப மரத்தின் குளிர் காற்றும் சூடாச்சு ...
நெற்றி வேர்வை வேலை செய்யாமல் பூமியில் பட்டாச்சு .
பூமியெங்கும் வேர்வை நாற்றம் மெல்ல வந்தாச்சு ..
பூமித்தாய் குளித்து பல மாதமாச்சு ..
மேலோகத்தில் இருந்து வரும் தண்ணீர் நின்னாச்சு
கஷ்ட்ட பட்டு கட்டிய கட்டிடம் பூமிக்குள் சென்றாச்சு ..
இதை பார்த்து கொண்டிருக்கும் பனி மலைகளும் மெல்ல உருக ஆரம்பிச்சாச்சு ...
வீட்டிற்கு நெல் குத்த கஷ்ட்டம் .....
வெளிநாடு சென்று இரும்பு அடிக்க இஷ்ட்டம் ...
அழகாய் இருக்கும் பூமியை அழகாய் பார்க்க கஷ்ட்டம் ..
அறுவடை செய்ய முடியாத செவ்வாய்க்குள் குடிகொள்ள இஷ்ட்டம் ..
சொல்வதையெல்லாம்
சொல்லிவிட்டேன்
இனி உங்கள் இஷ்ட்டம் .....
இயற்க்கை அன்னையின் இரத்தத்தை குடித்து விட்டு வாழ்வது ரொம்ப கஷ்ட்டம்...
இயற்க்கை மண்ணில் கிடைக்காத பொருளும் இல்லை ..
இன்பமாய் வாழ அதை தவிர ஒன்றும் தேவையில்லை ...
நமக்காக ....
உங்கள் நண்பன்.....