மரண வாக்குமூலம்
மரண வாக்குமூலம் தர காதல் வேண்டுகிறேன்.
காதல் மரணித்து விட்டதுப்போலும்
இதுவரையிலும் வசப்படவில்லை.
என் காதல் என்னை நிரகரித்துவிட்டது
காரணம் என் காதலி.
அணைந்துவிட்ட கரித்துண்டெல்லாம்
சூரியனை நிரகரித்துவிட முடியாது.
சூரியன் சிந்தாத இடகளிலெல்லாம்
பூக்கள் வாழ்வுக்கொள்ளாது.
பூக்களுக்கு தெளிய வருமா?
தெரியவில்லை
வண்டுகள் வருடாத மலர்களிலெல்லாம்
மகரந்தம் மறுமலர்ச்சி கிடையாது.
என் வாழ்வு வழிந்து கிடக்கிறது
நானோ அள்ள முடியாமல் தள்ளிப்போகிறேன்.
பொருள்கனூடே வாழ்வுத்தேடும் உங்களுக்கு
அறத்தினுன் அழகு சேர்க்கும்
ஆண்கள் பற்றி என்ன தெரியும்.
நான் அமைதி கண்டே அதிர்ந்துப்போகிறேன்.
உன் பேசாத வார்த்தகளுக்கு
மொழிப்பெயர்ப்பு யார் செய்யக்கூடும்?
உண்மையின் தோரனை ஒண்ணுதான்.
பொய்களே பிம்பங்களாய் சிதறிக்கிடக்கின்றன.
கவிதையில் உன்னை நிரப்பும் பொழுதெல்லாம்
பொய்களோடு இணங்கிப்போகிறேன்
என்பதை பகிரங்கமாக ஒப்புவிக்கிறேன்.
நீயோ ஒற்றைப்பார்வைக் கொண்டு
உலகைப் பார்க்கிறாய்.
உலகம் என்பது நீயல்ல?
உன்னோடு முடிந்துவிட!
நிலா விழும் இரவில்
அடங்கிப்போகின்றது என் ஆண்மை.
கையளாகதனத்தினை இப்படி வேண்டுமானல் சொல்லலாம்.
நீயில்லா வாழ்வு நீட்டப்படா வானம் போன்றது.
ஒரு படிகெட்டான் போல
அறிவுக்கு தூக்கிட்டு அழிவுகிறேன்.
அறிவுக்கும் மனதுக்கும்
அலைவுற்று நிற்கிறேன்.
சில்லரைகள் போல காதல் வேண்டும்
என்னை எழுப்பி எளிதில் காட்சிச்சொல்லும்.
வாழ்வுக்கு பொருள் சேர்க்கும்
வாய்ப்பு எனக்கு!
நானோ கச்சணிந்த கொங்கையர் மீது
இச்சைக்கொண்டு உயிர் வளர்க்கிறேன்.
கோபங்களாய் உதிர்கின்ற பொழுதினும்
ஒருபோதும் தீயை உமிழ்ந்ததில்லை.
பூக்களின் பயன்பாடு என்பது
பொய்களுக்கு பொருள் சேர்ப்பது போன்றது.
மயக்கம் கொள்ளும் நடுனிசியில்
நான் தயக்கத்துடனே உறங்கச்செல்கிறேன்.
உறக்கனிலையிலும் காதல்
என்னை எழுப்பிவிடுகிறது.
இரக்கம் காட்டாத விழிகள்
என்னை தின்றது போக நினைவுகளை களவாடுகின்றது