பொய்களை மெய்கள் கவ்வுமோ

உன் விழிமொழிகளை
கவிதையின் சாயல்களாக விளக்கையில்
அதன் மொழிவிலிகளை ஊடுருவிச்செல்கிறது

மொட்டுகளின் மௌனங்கள்.
எந்தன் மூளைக்குள் மெட்டமைகின்றன

இல்லாத வானம் எல்லை என்பதுபோல
உன் வகைபடுத்த இயலா வசீகரம்
என்னை அலைகழிக்கிறது

பொய்களை எப்படி பிரகடனப்படுத்தினாலும்
அது கவிதையின் அழகை கொள்கிறது

பொய்களை மெய்கள் கவ்வுமோ!
உன் மிகைப்படுத்தப்ப்ட்ட மெய்களை பொய்கள் களவுமோ!

ஆழ்ந்த உரக்கத்தினை அடையாளமிடும்
கனவுகள் போல்
உன்னை நினைவுக்கொள்ள கற்பனையின் ஜுரம் தொற்றிக்கொள்கிறது.

பார்வையிலே சாரல் வீசுகிறாய்
நானோ நனைவதின்றி நடிங்குகிறேன்

இமைப்பொழுதில் என்னை கடக்கிறாய்
இவ்வுலகம் என்னை கைவிடுகிறது

பூக்கள் தூவும் வார்த்தைகள் பேசுகிறாய்
பூமி குளிர்ந்துவிட்டு போகிறது.

வீதியில் உலா போகிறாய்
பூக்கள் நகர்வலம் வருவதாய் தென்றல் வானிலை வாசிக்கிறது

உன் பிரசுரிக்கப்படாத பெயர்ப்புகள் காண
வாழ்வு நீளுமோ!

உன் நினைவுப்போதையில் திசையிழக்கிறேன்
உன் பரிசம்பட்ட காற்று
என்னை உந்திச்செல்கிறது.

கவிதையெழுதும் இரகசியமொன்றை
காதல் எனக்கு வழங்கி வருகிறது
நான் கவிதைகளை விதைத்து காதலாக்கிக்கொண்டிருக்கிறேன்
காதல் என்னை விருட்சமாக்குமோ?
இல்லை விரயமாக்குமோ?

எழுதியவர் : (30-Nov-13, 11:26 pm)
சேர்த்தது : ramj
பார்வை : 67

மேலே