கற்றது காதல்காதல் மட்டுமே

நினைவுகளின் தழும்பை
மொழிகளுள் விதைப்பது என்பது
மூளைக்குள் வேலை செலுத்துவது போன்றதாகும்.

மழைகாலத்தில் இடம் தேடும் தவளை போல
மனம் உன்னை தேடுகிறது

உண்மையை கூறிவிட உதடுகள் துடித்தாலும்
உள்ளம் ஒருபோதும் அதை ஏற்பதில்லை

என்னிலையிலும் மரணம் தழுவும் வாய்ப்பிருந்தாலும்
வாழ்வு என்னை வாழவிக்கவே விரும்புகிறது

நீயில்லை என்பது
முகம் தெரியாக் காட்டில்
ஒளிரும் ஒளி போன்றது

உன்னுடன் வாழ்வுதொலைத்த காலங்கள்
அடர்காட்டில் இடம் தேடுவது போன்றது

ஏதோ ஒரு சந்திப்பில்
ஏதோ ஒருவரின் அசட்டு சிரிப்பு
உன்னை சிந்திவிட்டு போகிறது.

பூவின் இதழ்கள் சுருங்கிவிட்டுப்போகட்டும்
பூமி ஒருபோதும் அழுவதில்லை.

ஒரு மௌனத்தின் தொடக்கம் என்பது
மலரின் மலர்ச்சிப் போன்றது
அது பக்குவத்தின் பரிணாமம்.

அம்மௌனம் ஆயிரம் சப்தங்களின் ஆச்சர்யம்
இயற்கை வழங்கிய மொழிகளுள்
இதற்கு வர்ணனை கிடையாது

விழிகளில் கருப்பெற்று
விரல் நீட்டும் காதல் போன்றது.

தொலை நோக்கும் மனமொன்றை
விலை பேசி வருகிறேன்
மனம் தொலைந்துவிடாமலிருகட்டும்

மௌனத்தினால் நிறைந்துவிட்ட மனம் எனக்கு
மரணம் வேண்டியே மண்ணில் நிலைத்திருக்கக்கூடும்

ஊமைக்கு விழிகள் பேசுவது போல்
என் பேச முடியாத வார்த்தைகளுக்கு
யாது பேசக்கூடும்?

எழுதியவர் : ராமசந்திரன் J (30-Nov-13, 11:26 pm)
சேர்த்தது : ramj
பார்வை : 94

மேலே