தெய்வம்

உன்னை அழைத்து சென்றேன் என் வீட்டிற்கு ..
மணக்கோலத்தில் ...

இவளையா எங்களுக்கு தெரியாமல் காதலித்தாய் என்றார் அப்பா..
உனக்கு போய் தங்கச்சியா பிறந்தேனே என்று முகத்தை திருப்பிகொண்டாள் தங்கை ..
உனக்கு வேற யாரும் கிடைக்க வில்லையா என்றான் தம்பி....
உனக்கு பொண்ணு கொடுக்க நிறைய பேர் இருக்கிறார்கள் என்று சொந்தங்கள் ...

உள்ளே கால் எடுத்து வைக்க மனமில்லை....
கண்கள் கலங்க துவங்கும் போது....
தடுத்து நிர்ப்பது போல் ....

வந்துட்டீங்களா ...
மகாலட்சுமி மாதிரி இருக்கா....
உனக்கு இப்படி ஒரு அழகான பொண்ணு ..
வாம்மா வலது காலை எடுத்துவைத்து வா ...

என்று அவள் பாடிய கவிதை எனக்காக அல்ல ..
என் இதயதேவதை கண்கலங்காமல் இருக்க..

எப்படி அம்மா நீ சொல்லும் எல்லா வார்த்தையும் இன்பத்தை மட்டுமே கொடுக்கிறது??
எல்லோரும் வணங்கும் ஒரே தெய்வம் நீ அம்மா ..

எழுதியவர் : சாமுவேல் (1-Dec-13, 8:45 am)
Tanglish : theivam
பார்வை : 167

சிறந்த கவிதைகள்

மேலே