செல் போன்கள் பயனா பாதகமா

அறிமுகமான புதிதில் ஓரளவு வசதி படைத்தவர்கள் மட்டுமே பயன் படுத்த முடியும் என்ற நிலை வெகு விரைவில் மாறி இன்று எங்கும் எல்லோரிடமும் பாரபட்சமின்றி நீங்கா இடத்தை செல் போன்கள் பிடித்து இருக்கின்றன.

மனித குலத்தின் மூன்றாவது கை! இரண்டாம் மூளை! பதினோராம் விரல்! என வர்ணிக்கப்படும்
செல்போன்களால் பயனா? பாதகமா? என அலசும் ஒரு சிறு முயற்சியே இந்தக்கட்டுரை.

உலக அளவில் சீனாவிற்கு அடுத்த படியாக இந்தியாவில் தான் சுமார் 900 மில்லியன் (90 கோடி) மக்கள் செல்போன் வாடிக்கையாளர்களாக உள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
இந்த எண்ணிக்கை தொடர்ந்து ஏறு முகமாகவும் இருப்பதாக உள்ளது.

இன்றைய சூழ்நிலையில் செல்போன் இல்லாத ஒரு உலகை எவராலும் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு மனித வாழ்க்கையோடு இரண்டற கலந்து விட்டது. இதற்கு முக்கிய காரணம் எவ்வளவு தொலைவில் உள்ளவரிடமும் உடனடியாக தொடர்புகொண்டு தகவல்களை பரிமாரிகொள்ளமுடியும்; மிக குறைவான கட்டணம் ; எளிதில் எவரும் கையாளலாம் என சொல்லிக்கொண்டே போகலாம்.

இன்று செல்போன்களின் இமாலய வளர்ச்சியை உலகில் உள்ள அனைத்து துறைகளும் அரசு, அரசு சாராத, பொதுதுறை நிறுவனம், தனியார், சிறு மற்றும் குறு வணிக நிறுவனங்களும் மிகச்சரியாக பயன்படுத்தி கொள்கிறது என்பதில் எந்த ஐயப்பாடும்மில்லை.

இதிலும் குறிப்பாக வங்கிகள், விளம்பர நிறுவனங்கள், மருத்துவமனைகள், பள்ளி/கல்லூரிகள், போக்குவரத்து சேவை, அரசு சலுகைகள், வியாபார சேவை, பேரிடர் கால தகவல்கள், காவல் துறை, அரசியல் கட்சிகள் என செல்போன்களின் பங்களிப்பை அடுக்கிகொண்டே போகலாம்.

பல்வேறு சிக்கலான தருணங்களில் காவல் துறை துப்பு துலங்க இந்த செல்போன்கள் மிக உதவியாக இருந்து இருக்கின்றன.

வங்கி சேவைகள் மிக எளிமையாகப்பட்டு சரியாக பயன்படுத்தினால் வங்கிக்கே செல்லவேண்டாம் என்ற நிலை.

GPS சேவையை பயன்படுத்தி எவர் உதவியுமின்றி செல்ல வேண்டிய இடம், தூரம், நேரம் முதலியவற்றை மிக துல்லியமாக கணக்கிட்டு கொள்ளலாம்.

விமானம், ரயில், பஸ் டிக்கெட்டுகளை இருக்குமிடத்திலிருந்து முன்பதிவு செய்யலாம்.

சில மேம்பட்ட தொழில் நுட்பம் கொண்ட செல்போன்களை பயன் படுத்தி வீட்டில் உள்ள மின்சாதனங்களை இயக்கலாம் மற்றும் வீட்டின் பாதுகாப்பினை கூட உறுதி செய்யலாம்.

அம்மாடியோ....இவ்வளவு வசதிகளை கொண்ட செல்போன்களால் என்ன பாதகம் இருக்க முடியும் என எண்ணத் தோன்றும். "ஒவ்வோர் வினைக்கும் ஓர் எதிர் வினை உண்டு" இதற்கு செல்போன்கள் விதிவிலக்கல்ல.

இன்று பிறந்து சில மாதங்களே ஆன குழந்தைக்கு கூட செல்போன்கள் தான் விளையாட்டு,

செல்போன் வாங்கி கொடுத்தால் தான் ஸ்கூலுக்கு போவேன் என அடம்பிடிக்கும் ஏழு வயது கூட நிரம்பாத குழந்தைகள்,

ஒரு சில கொடுரர்களின் தவறான பயன்பாட்டினால் பொதுமக்களுக்கு குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள் ,

செல்போன்களினால், நண்பர்களோடு சேர்ந்து விளையாடும் மாலை நேர விளையாட்டுகள் குறைந்து போயின இதன் விளைவு உடல் பருமானாகி, தன்னம்பிக்கை இழக்கும் குழந்தைகள்.

சில நிறுவனங்கள் செல்போன்களை அணைத்து வைக்க கூடாது என நிர்பந்திபதால் தனிமை இழந்து மனசோர்வடையும் மனிதன்,

என இவையெல்லாம் ஒருபுறம் இருக்க....
செல்போன் வெளியிடும் கதிர் வீச்சு நம் இதயம் மற்றும் மூளையை பாதிக்கிறது; தொடுதிரை போன்களால் விரல் கேன்சர் என தொடரும் பாதகம். மற்றுமொரு அதிர்சிகரமான உண்மை இதுப்போன்ற பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளால் மனித ஆயுள் காலம் குறைகிறது என்கிறது ஆய்வு முடிவுகள். நம் முன்னோர்கள் 80 ஆண்டுகள் வரை வாழ்ந்தார்கள் ஆனால் நம் ஆயுள் காலமோ 60 முதல் 65 ஆண்டுகள் வரை.

செல்போனால் மனிதகுலம் மட்டுமல்ல மற்ற எண்ணிலடங்கா உயிரனங்களையும் பாதிக்கிறது. செல்போன் கோபுரம் வெளியிடும் கதிர்வீச்சி சிறு பறவை இனங்கள், பூச்சிகள் மற்றும் ஈக்களை கொல்கின்றன. இன்னும் சில ஆண்டுகளில் தேனீக்கள் இனமே அழிந்து போகும் அபாயம்.

ஆகவே, செல்போன்கள் ... "செல்லப்போன்கள்" ஆவதும்!

"செல்லாப்போன்கள்" ஆவதும் சரியான மற்றும் தேவையான பயன்பாட்டில் மட்டுமே உள்ளது.

நன்றி ....

எழுதியவர் : கண்மணி (2-Dec-13, 12:51 pm)
சேர்த்தது : Kanmani
பார்வை : 252

மேலே