எப்போது வரும் ,,,,,,,,
காலையில் தேநீர்
கட்டிலில் உறங்கும்
உன்னை எழுப்பி
கொடுக்கிறேன்
குளித்து வந்த
உனக்கு என்
புடவை தலைப்பில்
தலை துவட்டுகிறேன்
காலை உணவை
உன்னை பிள்ளையாக்கி
நான் அன்னையாகி
ஊட்டுகிறேன்
வேலைக்கு செல்லும்
உன்னை வழியனுப்பி
வாசலில் விழி
பதித்து நிற்கிறேன்
நீ இல்லா
தனிமை தனில்
உன் உடையில்
உன் வாசம்
சுவாசிக்கிறேன்
மதியம் உன்னை
அலைபேசியில்
அழைக்கிறேன்
நீ உண்டாய்
என அறிந்த
பின்னே என்
முதல் பருக்கை
ருசிக்கிறேன்
மாலை நீ
வரும்போது
உன் கையிலிருக்கும்
மல்லிகையில்
மயங்குகிறேன்
இரவு உணவை
உன் விரல்களில்
சுவைக்கிறேன்
நானே உனக்கு
உணவாகி
என் இரவை
கழிக்கிறேன்
எல்லாம் முடிகிறது
கண்விழிக்கிறேன்
மீண்டும் தவிக்கிறேன்
எப்போது வரும்
அந்த இரவு
உன்னோடு
நான்
வாழும் கனவு,,,,,,,