வானம் முழுக்க வானவில்

பஞ்சு மிட்டாய்க்கு
வைர ஜிமிக்கி.....

குட்டிப் பல் தெரிய
குழந்தைச் சிரிப்பு.....!

வானம் முழுதும்
வானவில் - கண்ணே

வாய்விட்டே
நீ சிரித்தால்........!

வளர்ந்து வரும்
சிறு கவிதையே

வாழவேண்டும்
நீ பல்லாண்டு....!

வாழ்க்கை என்பது
வாழ்வதற்கே

வசந்தமென
நீ கொண்டாடு...!

வருத்தங்கள்
ஏதும் வந்தால்....

அழகு வண்ணமே
அதை நீ பந்தாடு.....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (2-Dec-13, 3:08 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 66

மேலே