தொடர்கிறேன் நான்

உன் விழிகளிடம் சொல்லி வை
அவை என்னை கடக்கும் போதெல்லாம்
காயபடுத்தி விட்டு போகின்றன........

விலகி நீ நடக்கிறாய் ஆனாலும்
உன் நிழல் என் மீதல்லவா படிகிறது
நிழலும் என்னை வதம் செய்கின்றது.......

உன் புன்சிரிப்பை நீ யாருக்கோ
சிந்திப்போகிறாய் அதன் ஒரு துளி
என் மனம் சிறைசெய்திட போதுமடி......

உன்னிடம் மாட்டிக்கொண்ட என் இதயம்
தூண்டில் மீனாய் துடித்தே சாவதா
திரும்பி நீ பார் தினசரி என் வரவு உனக்காய் ........

தொட்டில் குழந்தையாய் நான் நீ
ஆட்டிவைக்கும் திசையில் எல்லாம்
ஆடிகொண்டிருக்கிறேன் உறக்கமின்றி......

உன் பாதங்கள் நடக்கும் திசைகளில்
எல்லாம் என் பாதங்களின் வருகை
நீ அறிந்திராத போதும் தொடர்கிறேன் நான் ........

எழுதியவர் : கனகீஷ் (3-Dec-13, 2:11 pm)
Tanglish : thodarkiren naan
பார்வை : 121

மேலே