மாற்றத் திறனாளி
கை இரண்டு
கால் இரண்டு
கண் இரண்டு
காதிரண்டு
வாய் ஒன்று
மூக்கொன்றென உள்ள
உடலின் அழகுக் கூடு
செயலிழந்து
போனாலென்ன..
தன்னம்பிக் கை ஒன்றே
உடலின் உயிர் என்றே
முயற்சிக் கால் எடுத்து
தளராத கண் பதித்து
ஆற்றல் வாய் விரிந்து
ஏளன மூக்குடைத்து
அழகு வாழ்வுக் கூட்டில்
நம்பிக்கையோடு
எதிர்வரும்
துயர்களை தடைகளை
முறியடித்து சோகம்
மாற்றும் மனிதன்
மாற்றுத் திறனாளி அல்ல
கவலைகளைக் கழற்றி
மாற்றும்
மாற்றத் திறனாளி என்பேன்..
தன்னம்பிக்கை நம்பிக்கை எனும்
இரண்டு கைகள் கொண்டு
வாழ்வில்
துயர் வென்று
வீர நடை போடு மனிதா!
என
உணர்த்தும் சகமனித
மாற்றத் திறனாளியை வாழ்த்துவோம்...!!
... நாகினி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
