எங்கள் தேசம்
![](https://eluthu.com/images/loading.gif)
எங்கள் நாட்டு மக்களின் நிறம் மாறவேண்டாம்
அப்படியே இருக்கட்டும்
போர்க்களமே!
நீ மாறிவிடு எம்மக்களின் காலடிகளுக்கு பூவாக....
வானவில்லின் நிறங்களால் பிரிந்து போக வேண்டாம்
மதங்களே!
உங்களின் கொள்கைகள் பிரிந்து போகட்டும்,
என்நாட்டு மக்களுக்கு தெரியும் இயைந்து வாழ....
குழந்தைகளின் புன்னகை மாற வேண்டாம்
நாளைய எங்கள் இந்தியா சிரிக்கட்டும்
இனப்படுகொலையே!
நீ தொலைந்து போ...
அன்பின் பூக்கள் சிதைய வேண்டாம்
ஒற்றுமையில் எங்கள் உறவு மலரட்டும்
தீவிரவாதமே!
உன் ஆட்டத்தை நிறுத்திக்கொள்!
பாலைவன வறட்சி பூக்களின்
விதைகளை இம்மண்ணில் விதைக்க
விடமாட்டோம்...!!
இது எங்கள் நாடு....
நாங்கள் அனைவரும் சகோதர சகோதரிகள்!
இம்மண்ணின் தாய் (பாரத தாய்) கருத்தரித்த
குழந்தைகள்...
இது எங்கள் தேசம்
வீரமும் ஒற்றுமையும்
தியாகமும் தூய்மையும்
தாய்மையும் நிறைந்தது!
எங்களை உருக்குலைக்க நீங்கள் யார்...??
கோட்டையும் எங்கள் பூமிதான்
குடிசைகளும் எங்கள் தாய்நாடுதான்
ஏற்ற இறக்கங்கள்
என் நாட்டின் வனங்களில் இருக்கிறது
எங்களில் விதைக்க நீ யார்...??
நேரிடுவதை நெஞ்சு நிமிர்த்தி போராட
என் இந்தியனுக்கு துணிச்சல் உண்டு
எங்களுக்குள் நஞ்சை விதைக்க நீ யார்...??
விரல்களின் உயரங்களில் வித்தியாசங்கள் இருந்தாலும்
கைகளின் பொருள் மாறுபடுவதில்லை!
எங்களின் நிறங்கள் மாறுபட்டாலும்
மதங்கள் திசைகள் மாறுபட்டாலும்
நாங்கள் இந்தியர்கள்...
மறந்துவிடாதே!!
நாங்க ஒன்று பட்டால்
உன் நிலையென்ன...?!
தீவிரவாதமே...
இனபடுகொலையே...
ஜாதிவேறியர்களே!
சதிகாரர்களே...!!
உங்களுக்கு ஒன்று சொல்கிறேன்..
இது எங்கள் சொர்க்க பூமி
என் நாட்டின் ஒவ்வோர்
இளைஞனின் குருதியாய் ஓடும்
எங்கள் சொந்த பூமி!
உறவினராய் வந்து எங்களில்
ஒருவனாகவே மாறிவிடு!
உன்னை கட்டிப்போடும் அன்பு
எங்கள் இந்தியர்களுக்கு உண்டு....
ஆனால்..
எங்கள் முதுகில் குத்த நினைத்தால்...
நாங்கள் மருண்டு பூக்கும்
கோழையர்கள் அல்ல!
வெகுண்டு எழும் போராட்ட வீரர்கள்...