தமிழ்க்கவி வாலி

தமிழின் கவியுலகில்

உந்தன் இடம்

என்றுமே உனக்கானது...


காவியமும் பாவியமும்

செறிந்து கொழித்த

அந்தமிழ் பாவலா...


சிந்தையில் தெறித்த

அறிவில் தரித்த

ஒண்டமிழ் பாவலா...


இயல்பாய் இசையாய்

நாடகமாய் வாழ்ந்த

முத்தமிழ் பாவலா...


உன் வாய் வழி

வந்த வண்டமிழ்

என்றும் நிலைக்கும்...


பெருங்கவி வாலி

அவர்தம் புகழ்

வாழி வாழியவே...

எழுதியவர் : சு.சுடலைமணி (5-Dec-13, 5:06 pm)
பார்வை : 110

மேலே