என் மனதின் தவிப்பு

என்னவளே
உன்னை பார்த்து சென்ற முதல் - மீண்டும்
எப்பொழுது பார்ப்பேனென்று
காத்திருந்த நாட்களும் - உன்னை
காணாத நாட்களும் - என்
மனதை வதம் செய்தது - அதனிலும் கொடுமை
உன்னிடம் பேசாமல்
உன் குரலை கேட்காமலிருந்தது !...

கண்மணியே சுருங்க சொன்னால்
உன்னை காணாத நாளிலும்
உன்னுடன் பேசாத நாளிலும்
என் மனம் ஊனமாய் ஆனதடி !..

பெண்ணே
மெத்தனமாய் இருந்த
என் மனதுக்கு ஒத்தனமாய்
உன் ஓரப்பார்வை ...
சுற்றி திரிந்த என் மனதை கட்டிப்போட்டது
இதழ் திறந்து பேசுவாய் என
என் இதயம் காத்துக்கிடக்கிறது ! ...

அன்புடன் ...

எழுதியவர் : சுரேஷ்.G (6-Dec-13, 10:37 am)
பார்வை : 205

மேலே