சிந்தித்தால் சிரிப்பு வரும் 1

சிந்தித்தால் சிரிப்பு வரும் ..

"ஆலயம் தொழுவது சாலவும் நன்று".

இந்த வாக்கியம் ஔவையார் "ஆத்திச்சூடி" யில் சொல்லி இருக்காங்க அப்படின்னு சின்ன வயசுல பள்ளிக்கூடத்தில சொல்லிக் கொடுத்தாங்க.

மறக்க நினைச்சும் மறக்காமப் போன எத்தனையோ சங்கதியில் இதுவும் ஒன்று.

ஒருநாள் சரி இந்த ஔவை பாட்டி வேறு என்னென்ன சொல்லி இருக்காங்கன்னு வலைத்தலங்களில் தேட முனைந்தேன்.

அப்பத்தான் ஒரு விஷயம் முதன்முதலாகத் தெரிந்து கொண்டேன். அதாவது .. ஔவை ல நாலு பேரு இருக்காங்கன்னு. இப்போ இதைப் படிச்சுட்டு, அந்த நாலுபேர்ல யாரு இதை சொன்னாங்கன்னு யாராவது கேட்டா எங்கய்யா போறது ?

அதுவும் இல்லாமல், சிலர் சொல்றாங்க "ஔவை"யை "அவ்வை" ன்னு சொல்லறது தப்புன்னு. ஒரு சிலரு ரெண்டும் சரிதான்ன்னு சொல்றாங்க. யாரைய்யா நம்பறது ?

எழுதியவர் : (6-Dec-13, 6:15 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 155

மேலே