அவிழ்க்க முடியாத முடுச்சு

ஆண்டாண்டாக அடிப்படை விஷயமான
'சுத்தம் சுகாதாரம் தரும்' என்னும் விஷயத்தை
மக்களிடம் போய் சேர்க்க முடியவில்லை
என்றால் அது மக்களின் குற்றம் மட்டுமா ?
மக்களால் படைக்கப்பட்டதுதான் மொழி
தமிழ் மொழியின் மேல் ஈர்ப்பு இல்லை ,
அல்லது ஈர்க்கும்படி மொழிக்கு மேருகேத்தவில்லை .அந்த காலத்தில் இதற்கென்றே புலவர்கள் நான்கு பேர் கூடி கூடி
பேசி புதிது புதிதாக காலத்திற்கு ஏற்றவாறு
சொற்கள் கண்டு பிடித்து ,மொழியின் புகழ் பாடி அழியாமல் பாதுகாத்தனர், நமக்கு இங்கே
இதற்க்கு எங்கே நேரம் ? புலவனாவது ஒன்னாவது
நாட்டையே அடகு வைத்துவிடுவார்கள் போல் இருக்கிறது ஊழலில்!. இதில் எங்கே தமிழிற்கு அழகு சேர்க்க. சில சமயங்களில் பார்லிமெண்டில்
ஊழல் பேர்வழிகள் பேசிகொண்டிருக்கும் பொழுது
அப்படியே பூமி மாத வாயை பிளக்கமாட்டாளா
என்று தோணும்,நம் நாடும் சுத்தமாக,எல்லோரும் படித்தவர்களாக ,அடிப்படை வசதியுடன் வாழ்வதை எப்பொழுது பார்பேன் என்று தோன்றாத நாளில்லை.
அவிழ்க்க முடியாத முடுச்சாக உள்ளது இந்தியாவின் நிலை.காலம் தான் பதில் சொல்ல வேண்டும்..

எழுதியவர் : Aswini (7-Dec-13, 3:28 pm)
சேர்த்தது : Aswini Dhyanesh
பார்வை : 72

மேலே