அவள்

அந்திவானம் வெட்கபட்டு செவந்தது............
உன் மஞ்ச முக மேனிய பார்த்துச்சோ!
கடல்கரையில அலைகள் துள்ளி ஓடுது ....
உன் கால் கொலுசு சத்தம் கேட்டுச்சோ!

மின் மினி பூச்சிகள் கூடி கூடி பேசுது
உன் கண்ணு மின்னும் அழக பார்த்துச்சோ !
மலை முகடு கேட்டுச்சோ !
உன் மூக்கை கடன்!

இரு பாலம் போட சொல்லி
ரெண்டு ஊரு மறியல் பண்ணுச்சோ!
உன் உதடுகளிடம் !

முத்து மணி தோற்றுச்சே !
நீ வெள்ளை பல்லு தெரிய சிரிக்கையில் !

கண்ணிரெண்டும் என்ன தவம் பண்ணுச்சோ !உன்ன கண்டு கவிதை எழுத .............

எழுதியவர் : கிரிஜா .தி (7-Dec-13, 6:53 pm)
Tanglish : aval
பார்வை : 650

மேலே