கண்ணுக்கு தெரியாது
இரண்டு சிறுவர்கள் ரோட்டில் நின்று கொண்டு சண்டை போட்டு கொண்டிருந்தனர் ...
அப்போது அதை கடையில் இருந்து பார்த்து கொண்டிருந்த மளிகை கடை முதலாளி டேய் இங்க வாங்கடா என்றார் ...
முதலாளி : என்னடா அங்க சண்ட...
சிறுவர் 1 : இல்லைங்கையா நாங்க இரண்டு பேரும் நடந்து வரும் பொழுது எங்கள் கண்ணில் 100 ருபாய் தரையில் கிடந்ததை கண்டோம் ஆனால் இவன் நான் தான் கண்டேன் அதனால் எனக்கு தான் சொந்தம் என்கிறான் ஆனால் நான் தான் முதலில் பார்த்தேன் ....இப்போது சொல்லுங்கள் இந்த 100 ருபாய் யாருக்கு சொந்தம்...
முதலாளி மனதில் சந்தோசம் அட இரண்டு பேரும் சின்ன பசங்க ரொம்ப சுலபமா ஏமாத்தலாம் என்று எண்ணியபடியே ...
முதலாளி : இப்பதான் தம்பிங்களா கடைக்கு நடந்து வரும் போது என்னோட 100 ருபாய் தொலைந்து விட்டது நல்ல வேலை அது உங்கள் கையில் கிடைத்தது ரொம்ப நல்லதா போச்சு இந்த 5 ரூபா வச்சிக்கிட்டு அந்த 100 ரூபாய கொடுத்திடுங்க தம்பிங்களா...
சிறுவர் 1: அப்படியா அய்யா என்று சொல்லி அடுத்தவனை பார்த்து டேய் இது அவரோட காசு அதனால அவர் கிட்ட கொடுத்திடுற சரியா என்றான்...
சிறுவன் 2 : சரி டா...
சிறுவன் 100 ரூபாயை எடுத்தவுடன் முதலாளி அதை பிடுங்கி பணப்பெட்டியில் வைத்துவிட்டு இரு சிறுவர்களுக்கும் ஐந்து ஐந்து ருபாய் கொடுத்தார்...சிறுவர்களும் சிரித்த வண்ணம் நன்றி என்று சொல்லிவிட்டு புறப்பட்டனர்...
முதலாளிக்கு பெரிய சந்தோசம் ஒன்றும் செய்யாமல் 90 ருபாய் லாபம் என்ற மகிழ்ச்சி அடைந்த வண்ணம் பணப் பெட்டியை திறந்து பார்த்தால் ஆச்சர்யம் !!!!
சிறுவர்கள் கொடுத்த 100 ரூபாயில் ஒருபக்கம் வெள்ளையாக இருந்தது அப்போதுதான் முதலாளிக்கு புரிந்தது அது சிறுவர்கள் விளையாட பயன்படுத்தும் விளையாட்டு ருபாய் நோட்டு என்று...வீணாக போய் விட்டதே 10 ருபாய் என்று மூச்சு விடும் முன் சிறுவர்கள் தனது தந்தையுடன் கடைக்கு வந்தார்கள்...
சிறுவர்களின் அப்பா கடை முதலாளியை பார்த்து : ஏம்ப்பா சின்னப்பசங்க கீழே கிடந்ததேன்று 100 ருபாய் கொடுத்தார்களே அதை திருப்பி கொடு அத்தோடு நீ கொடுத்த 10 ரூபாயை நீ யே வைத்துக்கொள் என்று சொல்லி 10 ருபாய் நோட்டை மேசை மீது வைத்தார் ..
முதலாளிக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை ...100 ருபாய் கொடுக்கவில்லை என்றால் ஏன் என்று கேட்ப்பான் .."சிறுவர்கள் விளையாட்டு 100 ரூபாய்தான் கொடுத்தார்கள் என்றால் பின்பு அதற்க்கு எதற்கு 10 ருபாய் நீ கொடுத்தாய் என்பான்"..வாங்கவே இல்லை என்றால் "என்னை விட சிறுவர்களைத்தான் இந்த உலகம் நம்பும் என்று நினைத்தபடியே"....10 ரூபாயை எடுத்து கொண்டு 100 ருபாய் கொடுத்தான்...
நீ சிறியவன் என்று நினைத்து ஏமாற்றினால் ...
உன்னை சிறியவன் என்று நினைப்பவர்கள் உன்னை ஏமாற்ற போகிறார்கள் என்று அர்த்தம்...
உங்கள் சிந்தனைக்காக ...