நாராயணசாமி
கவனக்குறைவாக இருப்பதாய் அவர் மனைவி குறைபட்டுக் கொண்டார்.
அதிலிருந்து கொஞ்சம் கவனமாக இருக்க நாராயணசாமி முடிவு செய்தார்.
ஒரு நாள் பஸ்ஸில் வரும்போது நடத்துனரிடம் இரண்டு டிக்கெட்கள் எடுத்தான். அருகிலிருந்த அவனுக்கு தெரிந்த ஒருவர் 'ஏன் 2 டிக்கெட் எடுக்கறீங்க...? ' என்றார்"ஒண்ணு மிஸ்ஸானாலும் ஒன்னை வச்சுக்கலாம்ல...""ரெண்டுமே மிஸ்ஸாயிடுச்சின்னா...?""அதுக்குதான் பணம் வச்சிருக்கேனே...
""பணத்தை யாரும் எடுத்துட்டாங்கன்னா..?" "பேண்ட் பாக்கெட்ல பர்ஸ் வச்சிருக்கேன்... அதிலேர்ந்து எடுத்துப்பேன்.." "அதையும் யாரும் பிக்பாக்கெட் அடிச்சிட்டாங்கன்னா...?
"நான் என்ன முட்டாளா....?அதுக்காகத்தான் பஸ் பாஸ் எடுத்து வச்சிருக்கேன்..."என்று பெருமையாக சொன்னார் நாராயணசாமி.