என் தவிப்பு,

என் வற்றிய குளத்தை

புனிதமாக்கியதுடன்,என் வாழ்வையும்

புனிதமாக்கினாள், வேடந்தாங்கல்

வெண்புறா அவள், காலம் முடிந்ததும்

பறந்து சென்றாள், அவளோடு

பறக்கதான் ஆசைப்பட்டேன்,அவளோ

பறந்துதான் சென்றாள், என் சிறகையும்

எடுத்துக் கொண்டு, கண்ணீர் கடலில்

என்னை தவிக்க வைத்து விட்டு ........,

எழுதியவர் : மது (10-Dec-13, 5:40 pm)
பார்வை : 101

மேலே