அவனும் மழையும்,

மன்னவன் வயது இருபத்துமூன்று

மழை வந்தால், மனம்மாறும் குழந்தை

அருவியில் நீரூற்றின் சாரல்

அவன் வீட்டு முற்றத்தின் மழைசாரல்

விலைஉயர்ந்த வைரம், அவன்

கையில் விழும் மழைக்கட்டிகள்

விலைமதிக்க முடியாத சொத்து

அவன் கன்னத்தை வருடும் மழைத்துளி

இனிமையான சங்கீதம், மழைநீரில்

நடக்கும் என்னவன் காலடி ஓசை

இனியொரு விதியிருந்தால்

பிறக்க வேண்டும் மழையாக..........,

எழுதியவர் : madhuprem (10-Dec-13, 6:02 pm)
பார்வை : 93

மேலே