வேலையில்லா பட்டதாரிக்கு
உலகத்திலே நீளமாய் தெரிகிறது
பகல் பொழுது;
பகல் முழுதும் ஊர் சுற்றிய கால்கள் அடங்கியே
கிடக்கிறது வீட்டினுள் அந்திசாயும் வரை;
நன்றாக வயிறு நிறைய உண்டு
நாட்கள் ஆகிறது;
ஓயாது பேசிய வாய் மௌனவிரதம் மேற்கொண்டு விட்டது;
உயிர்தோழனையும் நேரெதிர் சந்திக்க மறுக்கிறது
கண்கள்;
தன் பிள்ளைகளின் வேலை பற்றி பெருமை கொள்ளும் அண்டை வீடு அன்னைமார்களை
சுட்டெரிக்கிற மாதிரி பார்கிறது கண்கள்;
உறங்கும் நேரம் தவிர்த்து உள்ளம் எதையோ
பறிகொடுத்தாற்போல் இருக்கிறது;
வேலை தேடுவதே வேலையாய் இருக்கும்
வேலை இல்லா பட்டதாரிக்கு.