பெண் தேடுகிறேன்

என் உயிர் நண்பனுக்கு
பெண் தேடுகிறேன்......

* மாளிகையில் வசிக்கும்
பெண் வேண்டாம்...
மளிகை வாங்கி சமைக்கும்
பெண் போதும்!!!

* ஜாதி, மதம் உள்ள
பெண் வேண்டாம்...
நீதி, நேர்மை உள்ள
பெண் போதும்!!!

* பணம் வசதி உள்ள
பெண் வேண்டாம்...
குணம் வளம் உள்ள
பெண் போதும்....

* பொன், பொருள் உள்ள
பெண் வேண்டாம்...
கண்ணும், கருத்துமாய் பார்த்துக்கொள்ள
பெண் போதும்....

* அழகும், அறிவும் உள்ள
பெண் வேண்டாம்...
அன்பும், பண்பும் உள்ள
பெண் போதும்....

குறிப்பு: என் நண்பனுக்கு போலியோவால் இரண்டு கால்கள் செயல் இழந்தவன். அவனை கடைசி வரை பார்த்துக்கொள்ள நல்ல பெண் தேவை. இதில் தவறாக எதாவது எழுதி இருந்தால் மன்னிக்கணும்.

எழுதியவர் : இதயவன் (11-Dec-13, 10:07 pm)
Tanglish : pen thedukiren
பார்வை : 102

மேலே