பிஞ்சு குழந்தை

தன் பிஞ்சு விரலை வாயில்
வைத்து கொண்டு
ஆழ்ந்து உறங்கும் பால் குடி மறவா குழந்தையை அதட்டி எழுப்புகிறது
அன்னையின் குரல் .....

கண் விழிக்க சிணுங்கும் சின்ன குழந்தை
கண் திறக்கும் முன்னே, குளியல் முடிந்து உடை மாற்றி முடிந்தது ...

உண்ண மறுத்து பின் ஆயிரம் திட்டுக்களுடன் உண்ணுகிறது அரை இட்லி யை ...

பாதி உறக்கத்தில் வீங்கிய கண்களுடனும்
பவுடர் பூசிய முகத்தில் கண்ணீரின் தாரையுடனும், சில சமயங்களில் அடி வாங்கிய வலியுடனும்

கனத்த நெஞ்சத்துடன் முதுகில் அதை விட கனமான புத்தக பையுடன் , ஒரு கையில் உணவு பையை வைத்து கொண்டு மறு கையை மெதுவாய் அசைக்கிறது பள்ளி பேருந்தின் படியில் ஏறும் போது...

மம்மி டாட்டா

மழலை மொழி உதிர்த்து மனமின்றி விடை பெறுகிறது
பிதுங்கிய உதடுகளுடன் "பிஞ்சு குழந்தை "

எழுதியவர் : சத்யா விக்னேஷ் (12-Dec-13, 12:49 am)
Tanglish : pinju kuzhanthai
பார்வை : 2969

மேலே