என் காதல் தேவதையே என் தமிழ்த்துணையே

" என் காதல் தேவதையே!.. என் தமிழ்த்துணையே!.. "

உன் முந்தானைவாசம் கானாமலே
நான் முதிரிளைஞன் ஆகிவிட்டேன்!
உன் வருகைக்காக
கண்கள் வாடிக்கிடக்கின்றேன்!
உன் நேசத்திற்காக
இதயம் பூத்துக்கிடக்கின்றேன்!
என் தமிழே! என்னுயிரே!
நீ வரவேண்டும்!
என் உயிர்த்தாகம்
நீ தீர்க்க வேண்டும்!
தமிழே! என் தமிழே!
என்னோடு கரம் கோர்க்க வா!
என்னோடு அகம் சேர்க்க வா!

என் உதிரமாகி உணர்வாகி
நீ கலக்க வேண்டும்!
என் காதலாகி கவிதையாகி
நீ வாழவேண்டும்!
காலை எழுவதும் தமிழே!
உன்னோடு வேண்டும்!
இரவு உறக்கமும் தமிழே!
உன்னோடு வேண்டும்!
என் தேவதையே! என் தேன்தமிழே!
நீயே என்றும் என் துணையாக வேண்டும்!

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (12-Dec-13, 9:59 am)
பார்வை : 231

மேலே