பள்ளி நாட்கள்

மனதில் கள்ளம்கபட மில்லா நாட்கள்
கவலைகள் துன்பங்கள் இல்லா நாட்கள்

எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கா நாட்கள்
எவர்க்கும் எதற்கும் அஞ்சிடா நாட்கள்

சிறகில்லாமல் வானத்தில் பறந்தோம்
விளையாட்டாய் எதையும் நினைத்தோம்

படிப்பில் நம்மை மிஞ்சியவரில்லை
பண்பிலும் நமக்கு இணை யாருமில்லை

ஐவரும் ஒன்றாய் எங்கும் சுற்றினோம்
செல்லமாய் பாண்டவர்கள் என்று பெயரும்
பெற்றோம்

நாம் இருக்குமிடத்தில் சிரிப்புக்கு பஞ்சமில்லை
நம் அரட்டயை விரும்பாத ஆட்களும் இல்லை

ஒரு மிட்டாய்க்கு நீண்டது நம் ஐவர் கைகளும்
ஒருவர் பிழைக்கு தண்டனை நம் ஐவர்க்கும்

இறுதிவரை தொடர்பில் இருக்க வேண்டும் என்று
உறுதியேற்றோம்
இறுதி நாளில் கண்ணீரோடு பிரியா விடை
பெற்றோம்

திரும்பக் கிடைக்காத நாட்கள் திரும்பி பார்க்கும்
போது
கனத்த இதயமும் கண்களில் கண்ணீருமே
மிஞ்சுகிறது

கடவுளே பணத்தை தா பதவியை தா என்று
கேட்கவில்லை
என் பள்ளி நாட்களை திரும்ப தா என்று தான்
கேட்கிறேன் !!!!!!





i miss my best frnds {kalai,,,anu,,,abi,,,rem}

எழுதியவர் : பிரியா மணி (13-Dec-13, 10:57 pm)
Tanglish : palli nadkal
பார்வை : 2808

மேலே