வலியுடன் ஒரு காதல்

நாம் பழகி
இதோ வருடம் ஒன்றாகி போகிறது!
எதோ நேற்று தான்
உன்னை சந்தித்தது போல சிந்திக்கையிலே
வருடம் கடந்ததை மறந்து விட்டேன்!
இத்தனை நாட்களாய்
இருக்கும் நம் உறவிற்கு என்ன பெயர்...?
என்னை கேட்டல் காதலன்,கணவன் என்று அடுக்கி சொல்வேன்...
உன்னை கேட்டால் நீ என்ன சொல்வாய்..?
ம்ம்ம்..சொல்,
உன்னை தான் கேட்கிறேன்
நமக்குள் என்ன உறவு...?
உனக்கு நான் என்ன உறவு...?
நட்பென்று சொல்வாயா...?
நட்பில் காமம் இல்லை...
காதல் என்று சொல்லாதே,
உன்னில் ஒரு நாளும் கண்டதில்லை காதலை ...
பின்,
பொழுதுபோக்கிற்கென்று வைத்திருக்கும் சதைபிண்டமா,
அதாவது ஆண்களுக்கு அரிப்பு கூடி போகையில் போகும் தாசி பெண்ணென கொண்டாயோ...
சொல்,
சொல் என்னவனே..
தினம் தினம் என் நெஞ்சம்
என்னை பார்த்து கேட்கும் கேள்வியை
இன்று நான் உன்னை பார்த்து கேட்கிறேன்!!!
அளந்து பேசும்
உன் வார்த்தைகள் என்னிடம் மட்டுமே,
சிரித்திட மறுக்கும் உன் இதழ்கள்
என் நகைச்சுவைக்கு மட்டுமே,
பொறுமையை சோதிக்கிறாய்!
ஆகட்டும் எத்தனை நாட்களுக்குத்தான் என்று பார்க்கிறேன் !
தஞ்சம் கொண்ட நிலவை
மஞ்சம் கொண்ட என் மன்னவனே ...
உன் நிலவாக்கி சொந்தம் கொள்ள மறுப்பது ஏனோ...
நெஞ்சம் தான் தாங்குமோ
என் அச்சம் கூடி போகுதே
உன் மௌனம் காணும் வேளையிலே...
பூத்திருக்கும் புது மலராய்
என்றென்றும் உனக்காக
காத்திருக்க சம்மதமே..
தோட்டக்காரன் சம்மதித்தால்!
மற்றவர் மனதை காயபடுத்த
உனக்கு தெரியாது தான்
ஆனால் உன்னையறியாமல் என்னை காயபடுத்துகிறாய் என்பதை அறிவாயா?
பிறருக்கு ஒன்று என்றால் ஓடி ஓடி போய் உழைக்கிறாய்
எத்தனை நாட்கள் நான் உடல் நலமின்றி கேட்பாரற்று சோர்ந்து போனதை அறிவாயா...
உனக்காக யாரும் கஷ்டபடறது
உனக்கு பிடிக்காதது தான்
ஆனால்,
உனக்காக கஷ்டபடறது தான்
எனக்கு பிடிச்ச விஷயமே
ஏன் எல்லா காதலர்களை போல
நாம் இருக்க வேண்டும் என்கிறாய்?
ஏன் மற்ற காதலர்களை போல
நாம் இருக்க கூடாது என்று தான்
நான் உன்னை கேட்கிறேன்
உண்மையான் காதல் கண்களில் தெரியும்
என்று சொல்ல கேட்டதுண்டு
இது வரை உன் கண்களை நான் பார்த்ததே இல்லை நேருக்கு நேராய்!!!
இரவு நேரத்து உங்க வருகையில்
நான் வெட்கத்தில் கண்களை மூடி கொள்கிறேன்
அசதியில தூங்குறப்ப தான் உங்கள முழுமையா ரசிக்க முடியுது ...
அப்பப்பா!!!!சும்மா சொல்ல கூடாது
கருப்பா இருந்தாலும் ஆணழகன் நீ தான்!!!
கள்ளம் கபடமே இல்லாத அந்த முகம்,
ஒளிவு மறைவு இல்லாம பட்டுன்னு பேசுற
அந்த உதடு,
முத்தமிடும் வேளையில முட்டி மோதுற
அந்த மூக்கு ,
அறிந்தும் அறியாத மாதிரி...
முளைச்சும் முளைக்கததா இருக்கிற முடிகள் முளைத்த தாடை பகுதி ,
நான் சாய்ந்து கொள்ள தோதான பரந்த முடிகள் நிறைந்த மார்பு பகுதி ...
எல்லாமே அழகு தான் !!!!
போடா....
என்னத்த சொல்ல
உனக்கு இதே பொழப்பா போச்சு...
எப்போ பார்த்தாலும் என்ன புலம்ப வச்சுக்கிட்டு....