வாழ்க்கை சுவை பட - வார்த்தையை அடக்குவோம்

வெட்டும் மின்னல் விழி பறிக்கும் - வண்ணம்
கொட்டும் வானவில் சுகம் அளிக்கும்

ரெண்டும் தோன்றுவது விண்ணிலேதான் நம்
வியப்பும் பயமும் அதிலேதான் - ஆதலால்

வானம் அதனை நம் உறவைப் போல்
வடிவம் கொடுப்போம் அழகாக

பறந்து விரிந்த அவர்களிடம்
பழகி ரசிக்க குணங்கள் உண்டு - நாம்

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை - நல்ல
குணத்தை ரசித்தே வாழ்வை சுவைப்போம்...!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (14-Dec-13, 1:35 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 56

மேலே