விண்மீன்கள்

வானத்தில் எந்தன் வெண்ணிலாவோ
இரவுவின் மடியில் விண்மீன்களோ
அன்பே பூமிக்கு அருகில் வருவாயா
இல்லை என்னருகில் தான் வருவாயா
ஓரியன் விண்முகில் கூட்டமோ நீ
வண்ண உடைதரித்து நீயோ கண்சிமிட்டுகிறாய்
அன்பே வினோதமானவளே வானத்தில் ஒளிர்ந்து
மின்னிடும் உந்தன் முதல் முத்தம் சிரிப்பு முத்தம்
இரவெல்லாம் காத்துக்கிடக்கிறாய் புன்னகை பூவோ
தங்கமாய் மின்னும் எந்தன் சிரிப்பழகியே நீ வைரமோ
என் மரணம் வரை என்னை விட்டு பிரியாத அன்பே
நேசிக்கிறேன் உன்னை நம் காதல் மிகவும் வலுவானதே
யாரும் புரிந்து கொள்ள முடியாத காதலி
உந்தன் புன்னகையில் நான் வாழ்கிறேனடி
அன்பே நான் அழைக்காமலே வருகிறாய்
ஒளியாய் எனக்கு ஒரு மலர் போல இருக்கிறாய்
நானோ நடம்மாடும் உந்தன் உயிர் பாசக்காரி
நீயோ வெகு தூரத்தில் நட்சத்திர சொர்க்கத்தில் வாழ
உன் இதயம் என்னை தேடவில்லை ஏனோ
நானோ தினம் தினமும் உன்னை நேசிக்கிறேன்
என் அன்பே தினமும் உந்தன் சிரிப்பு முத்தத்தை
காற்றோடு சேர்த்து என்னிடம் அனுப்பி வைப்பாயா
விந்தைகள் பல புரிந்து என் உள்ளம் குளிர்ந்திட ...