மனதில் வெறுத்தேன்
அவனை வாசல் வரை வந்து
வழியனுப்பினேன் வாயில் ஒரு
புன்னகையையும் அவனுக்காய்
போட்டு வைத்தேன் .......!
வாசலில் நான் போட்ட கோலத்தைப்
பார்த்தேன் புள்ளிகளோடு அவைகள்
புரியாமல் பார்த்தன ..........!
என் வாழக்கையைப் போலவே ...!
அவன் படித்த பேப்பரை மடித்து வைத்தேன்
அவன் உடுத்திய துணியை துவைத்து வைத்தேன்
படுத்த பாயை உதறி வைத்தேன் - பாவி
என் வாழ்கையை ஏனோ தொலைத்து விட்டேன் .
இரவில் கசங்கிய பூவை வாரிப் போட்டேன்
என் கனவுகளையும் அதிலே சேர்த்துப் போட்டேன்
மன ஆறுதலுக்கு டி.வி யை போட்டேன் அதில்
நான் பேச நினைப்ப தெல்லாம் நீ பேச வேண்டும்
என்ற பாட்டை கேட்டு பெண்ணுக்கும் ஒரு
மனது இருப்பதை மறந்த ஆண்களை
மனதில் வெறுத்தேன் ......................................!