அவனும் அவளும்
அவன்
அதிகாலை , அவள் அழகை காண
என்னுடன் போட்டி போடுவான் ஆதவன் ...
ஆனால் அவள் பார்பதோ என்னைதான் !!!
வாசலில் நீர் தெளித்த அவள் என்னுள்
காதலையும் தெளித்து போனாள்!!!
கல்லூரி சாலையில் அவள் வரும் வேளையில் காத்துநின்றேன் ...
அவள் கண்ணசைந்த நேரம் தொலைந்தே போனேன்...
அவள் சிறு விழி தீவில்!!!
காதல் வலியை உணர்ந்தவனாய் ...
கண்ணீரை மறைத்தவனாய் நின்ற என்னில்...
வசந்தம் வீசியது அவள் வீசிப்போன புன்சிரிப்பில்!!!!
தொலைந்த போன என்னை மீட்டுகொடுத்துப் போனாள்...
புதிதாய் பிறந்தது போன்ற உணர்விலும் ...
அவள் கண்ணை விட்டு பிரிந்த கவலை கொஞ்சம்!!!!
அவள்:
உன்னை மீட்டுக் கொடுத்த போதுதான்
என்னை உன்னில் தொலைத்ததை உணர்ந்தேன் ...
திருடிப் போன கள்வன் நீ!!!!
காதல் மாயக்காரனே மயக்கி போன மந்திரம்ந்தான் என்ன!!!
உன்னை மற்றும் உற்று நோக்க வைத்த
தந்திரம் தான் என்ன!!!!
நீ கைவிரல் கோர்த்த போது தனிமை தொலைந்துபோனது ...
அப்படியே உறைந்து போக உள்ளம் ஏங்கி நின்ற நேரம் ...
உன்னை வட்டியும் முதலுமாய் மீட்டுக் கொண்டேன் !!!!
அந்த நேரமும் வந்து சேர்ந்தது நான் தலை தாழ்த்த
இரு உயிரை ஓர் உறவாய் கடவுள் முடிச்சு போட...
காதல்க்கோட்டை கதவு திறந்தது.!!!
காலம் ஓட ஓடி வந்த நம் காதல் பரிசு ...
என் கை பிடித்த நம் பிள்ளை ....
உன் கை பிடித்த நான் உன் பிள்ளை!!!
உறையா பனித்துளிகள் ஓயா கடல் அலைகள்
நம் காதல் கனவுகள் என்றுமே கலையாத நினைவுகள்!!!!