துரோகிகள் கவனத்திற்கு

நல்லவராய் நடித்திருந்து
நட்புடனே பழகிவந்து
அண்ணன் தங்கை என்றிருந்து
அவசரத்தில் வாய் பொழிந்து .........

வம்பு சாடைகள்
அம்பு வார்த்தைகள்
துரோக பார்வையில்
துடித்துக்கொண்டிருக்கிறது உங்கள் இதயம் ....

வெலியிலொன்றும் உள்ளொன்றும்
விரயமாகும் உங்கள் வார்த்தைகள்
வேதைக்குரியதாக்கி விட்டது
என்னை விசனத்துக்கு உள்ளாக்கிவிட்டது .......

அன்புடனே பழகிவந்த உறவுகள்
வம்புடனே வெளியேற
எதையோ இழந்ததாய் இதயம்
நியாபகம் படித்திக்கொண்டே இருக்கிறது ......

உணவு கொடுத்த நாய்
கடைசிவரை வாலாட்டியது
உதவி செய்த தேள்
ஒருமுறை அல்ல பலமுறை கொட்டிதீர்த்தது ......

நன்றி என்பதையே நீங்கள் இதுவரை
அறிந்திருக்க வாய்ப்பில்லை போலும்
போங்கள் காலம் உங்களுக்கு பதில்சொல்லும்
இதேதுரோகம் ஓர்நாள் பாடம் புகட்டும் ......

எழுதியவர் : வாழ்க்கை (17-Dec-13, 4:28 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 150

மேலே