மாயமா மரணமா
காக்கைகள் சிறகுகள் விரிக்க
நடுவானில் கழுகுகள் சிரிக்க
வேடிக்கை என்றானது வேப்பமரத்தில் சிட்டுகுருவி
பாடி பாடி தமிழ்பேசுது இளங்காட்டில் குயில்கள்
வண்ணத்தை பூசிக்கொண்டது மயில்கள்
மாறி மாறி வர்ணஜாலத்தை காட்டுது கிளிகள்
தோப்பில் கொக்குகளுக்கு என்ன வேளை
இருட்டிலே தேடுக்கின்றது ஆந்தை
காட்டில் களைபரிக்கின்றது கோழிகள்
ஆத்தில் வளைவிரிக்கின்றது கொத்திகள்
திரும்பி திரும்பி பார்க்கவா புறாக்கள்
விரும்பி விரும்பி சிரிக்கவா குஞ்சிகள்
குரும்பு செய்வதுதான் குருவிகள்
கண்ணை சிமிட்டுவதே அதன் அழகுகள்
அருகம்புல்லிடம் என்ன கோபம் மைனாவுக்கு
என்னை கொஞ்சம் பார்க்காதா என் கனவுக்கு
மண்ணோடு மண்ணாக உருவெடுக்க வந்தது காடை...,
இந்த மண்ணில் மறைகிறதே என்ன மாயை...!!!